மகாராணியாரின் மறைவு வெளிநாட்டவர்கள் கனேடிய குடியுரிமை பெறுவதில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்...
பிரித்தானிய மகாராணியார்தான் கனடாவின் தலைவரும்கூட.
அவரது மரணத்தைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் கனேடிய குடியுரிமை பெறுவதில் ஒரு மாற்றம் நிகழ இருக்கிறது.
பிரித்தானிய மகாராணியாரின் மறைவு பிரித்தானியாவில் மட்டுமல்ல, அவரது ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.
அதனால் பெரும் செலவு ஏற்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Stephen Lubig/CBC
மன்னர் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகளை அச்சிடுதல், மகாராணியாரின் உருவம் பொறித்த நாணயங்களை மாற்றுதல், தேசிய கீதத்தில் மாற்றம் என பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
கனடவைப் பொருத்தவரை, புதிதாக குடியுரிமை பெறுவோர் விடயத்திலும் ஒரு மாற்றம் செய்யப்படவேண்டியுள்ளது.
image - cbc
அதாவது, இதுவரை மகாராணியின் பெயரால் குடியுரிமை உறுதிமொழி எடுத்துக்கொள்வோர், இனி மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
ஆனாலும், கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு இந்த மாற்றம் எப்போது அமுலுக்கு வரும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.
Royal Canadian Mint/CBC
Adrian Wyld/The Canadian Press