ஜிலேபி செய்வதற்கு Machine.., அதை பார்த்ததும் ஆனந்த் மஹிந்திரா என்ன சொன்னார் தெரியுமா?
3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி செய்யும் வீடியோவை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபரும், மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர்.
இவர், அவ்வப்போது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோக்களை பகிர்ந்து கருத்துக்களை தெரிவிப்பது உண்டு. அந்தவகையில், தற்போது ஜிலேபி தயாரிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஜிலேபி வீடியோ
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் 3டி பிரிண்டர் முறையில் ஜிலேபி சுடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் அதில், "நான் ஒரு தொழில்நுட்ப ஆர்வலர். 3D பிரிண்டர் முனையைப் பயன்படுத்தி ஜிலேபி தயாரிக்கப்படுவதைப் பார்த்ததும் எனக்கு பல வித உணர்வுகள் தோன்றுகிறது.
I’m a tech buff.
— anand mahindra (@anandmahindra) February 21, 2024
But I confess that seeing jalebis being made using a 3D printer nozzle left me with mixed feelings.
They’re my favourite & seeing the batter squeezed out by hand is, to me, an art form.
I guess I’m more old-fashioned than I thought…pic.twitter.com/RYDwVdGc3P
எனக்கு மிகவும் பிடித்த ஜிலேபியை கையால் மாவு பிழிந்து சுடுவது ஒருவித சிறப்பான கலை என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை நான் பழமையை விரும்பும் அந்த காலத்து மனிதராக இருக்கலாம் என்று தோன்றுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |