பல கோடிகள் பணம்! அள்ளி தரும் தாராள தொண்டு செய்யும் மனம்... உழைப்பால் உலக பணக்காரர் ஆன இலங்கை வம்சாவளி தமிழரின் கதை
ஆனந்த கிருஷ்ணன் (83) என்பவர் இலங்கை வம்சாவளி தமிழர் ஆவார். ஆனந்த கிருஷ்ணன், மலேசியாவின் கோலாலம்பூர், பிரிக்ஸ்பீல்ட் பகுதியில் இலங்கை பெற்றோருக்கு பிறந்தவர்.
கோலாலும்பூர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா தமிழ் பள்ளியில் பள்ளி கல்வி பெற்றார். உயர்பள்ளி படிப்பை கோலாலும்பூரில் உள்ள விக்டோரியா கல்வியகத்தில் இவர் பயின்றார்.
பிறகு பொதுநலவாய நாடுகள் கூட்டமைப்பின் கொழும்பு திட்டத்தின்கீழ் இளங்கலை பட்டம் - அரசியல் அறிவியல் புலத்தில் அவுஸ்திரேலியா மெல்பேர்ண் பல்கலைக்கழகம் கல்வி பயின்றார்.
உயர்கல்வியை அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் பயின்று முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றார் ஆனந்த கிருஷ்ணன்.
பின்னர் அவர் எண்ணெய் வர்த்தக வணிகத்தில் நுழைந்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொண்டு வருவாயை குவித்தார், பிறகு தனது கடின உழைப்பால் தொழில்களில் உச்சம் தொட்டார்.
ஆனந்த கிருஷ்ணன் தொலைத் தொடர்பு, ஊடகம், எரிபொருள் துறைசார்ந்த தொழிலதிபராக இருந்து வருகிறார்.
போர்ப்ஸ் மலேசியா விபரங்கள் அடிப்படையில் மலேசியாவில் உள்ள நான்காவது மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் ஆவார்.
அவரின் தற்போதைய சொத்து மதிப்பு $5.8 பில்லியன் ஆகும். போர்ப்ஸ் பட்டியலில் உலகளவில் இவர் 515வது மிகப்பெரிய பணக்காரர் ஆவார். ஆனந்த கிருஷ்ணன் பொது வெளிப்பாட்டைத் அதிகளவு தவிர்ப்பவராகவே அறியப்படுகிறார்.
ஆனந்த கிருஷ்ணனுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். தனிப்பட்ட விமானத்தில் தெற்கு பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் பயணம் செய்வதில் தனது நேரத்தை செலவிடுகிறார்.
அவர் எண்பதுகளில் ஆப்பிரிக்க பஞ்ச நிவாரணத்திற்காக மில்லியன் கணக்கானவர்களுக்கு உதவ லைவ் எய்ட் ராக் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவுவது உட்பட 1985 முதல் தொண்டு நிறுவனங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
பல மாணவர்களுக்கு உயர்கல்வியை அடைய உதவித்தொகைகளை வழங்கியுள்ளார்.