3 செயற்கைக்கோள்களின் சொந்தக்காரர்..!பல்லாயிரம் கோடிகள் சொத்து: யார் இந்த மலேசிய தொழிலதிபர்?
வணிக நுட்பம் மற்றும் தொண்டு பணிகளுக்காக உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் ஒரு பெயர் த.ஆனந்த கிருஷ்ணன்.
மூலோபாய முதலீடுகள், தொலைத்தொடர்பு மற்றும் ஊடகம் ஆகிய பல்வேறு துறைகளில் ஆனந்த கிருஷ்ணன்(Tatparanandam Ananda Krishnan) புகழ் பிரம்மாண்டமாக பிரகாசிக்கிறது.
ஆனந்த கிருஷ்ணனின் விண்வெளித் திட்டம்
ஆனந்த கிருஷ்ணனின் விண்வெளி தொழில்நுட்ப திட்டங்கள் பலராலும் அறியப்படாத ஒன்று.
ஆனால் ஆனந்த் தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் மூன்று தனியார் தொடர்பு செயற்கைக்கோள்களின் பெருமைமிக்க உரிமையாளர் ஆவார்.
ஆனந்த கிருஷ்ணன் வளர்ச்சி
தொலைத்தொடர்புத் துறையில் கிருஷ்ணனின் பயணம் 1990 களின் முற்பகுதியில் மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸை(Maxis Communications) நிறுவுவதன் மூலம் தொடங்கியது.
இந்த நிறுவனம் ஆனந்த கிருஷ்ணனை விரைவில் முன்னணி மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டராக மாற்றியது.
இதனை தொடர்ந்து MEASAT Broadcast Network Systems மற்றும் SES World Skies ஆகியவற்றின் மூலம் தனது சாம்ராஜ்ஜியத்தை மேலும் விரிவுபடுத்தினார்.
அத்துடன் தன்னை உலகளாவிய செயற்கைக்கோள் தொழிலில் முக்கிய நபர்களில் ஒருவராக உறுதிப்படுத்தி கொண்டுள்ளார்.
தொண்டு முயற்சிகள்
வணிக செயல்பாடுகளை தாண்டி ஆனந்த கிருஷ்ணன் தொண்டு மற்றும் சமூக சேவைகளிலும் அர்ப்பணிப்பு கொண்டவராக தன்னை உருவாக்கி கொண்டுள்ளார்.
குறிப்பாக கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் பல்வேறு தொண்டு முயற்சிகளை அவர் தாராளமாக ஊக்குவித்து வருகிறார்.
சொத்து மதிப்பு
Forbes 2024 உலக பணக்காரர்கள் தரவரிசை தரவுகள் படி, ஆனந்த கிருஷ்ணன் $4.9 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் தரவரிசையில் 624வது இடத்தில் வைத்துள்ளார்.
Forbes தகவலில் 11, 2024 திகதி படி, ஆனந்த கிருஷ்ணனின் நிகர சொத்துமதிப்பு $5.2 பில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பு 438,792,380,000 ஆகும்.
ஆனந்தின் வணிக செயல்பாடுகள் மலேசியா, இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவியுள்ளன.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் அவரின் $7 பில்லியன் முதலீடு நாட்டின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |