கோவிலுக்கு வரும்போது ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரம்.., எத்தனை கோடி தெரியுமா?
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி அணிந்திருந்த கைக்கடிகாரத்தின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானி திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.
ஆனந்த் அம்பானியின் கைக்கடிகாரம்
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நெரல் பகுதியில் உள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு ஆனந்த் அம்பானி சென்றிருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் வைரலாகி வருகிறது.
இவரிடம் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களுடைய கைக்கடிகாரமே அதிகமாக உள்ளது. இந்நிலையில், ரிச்சர்ட் மில்லே Richard Mille watch (RM 12-01 Tourbillon) கைக்கடிகாரத்தை அணிந்திருந்தார். இதன் மதிப்பு ரூ.6.91 கோடி என்று கூறப்படுகிறது.
இதுவரை இந்தவகையில் 18 கைக்கடிகாரங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |