ஆனந்த் அம்பானியின் ஆண்டு ஊதியம் மட்டும் இவ்வளவா? வெளியான தகவல்
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் ஆண்டு ஊதியம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இளைய மகன்
ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார்.
இது சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ஆனந்த் அம்பானி குறித்த தகவல்கள் பல வெளியாகி வருகின்றன.
Reliance Retails, Jio Platforms Limited மற்றும் Reliance Retail Ventures Limited ஆகியவற்றுக்கு ஆனந்த் அம்பானி பொறுப்பு வகிக்கிறார்.
29 வயதான நபராக இருந்தாலும் ஆனந்த் அம்பானியின் செல்வாக்கு நிறுவனத்திற்குள் குறிப்பிடத்தக்கது.
ஊதியம்
இந்த நிலையில் ஆனந்த் அம்பானி ஆண்டுக்கு 4.2 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவரது நிகர மதிப்பு தான் ஆச்சர்யம் தரும் வகையில் உள்ளது.
அதாவது ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டொலராகும். இது இந்திய மதிப்பில் 3,35,770 கோடி ரூபாய் ஆகும்.
அதே சமயம் இஷா அம்பானியின் ஆண்டு ஊதியம் 4.2 கோடி ரூபாயாக இருந்தாலும், அவரின் நிகர மதிப்பு 100 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.831 கோடி) என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |