மெஸ்ஸிக்கு அரிய பரிசை வழங்கிய ஆனந்த் அம்பானி! உலகிலேயே 12 தான்..விலை எவ்வளவு தெரியுமா?
லியோனல் மெஸ்ஸியின் வந்தாரா வருகையின்போது ஆனந்த் அம்பானி அரிய பரிசை வழங்கினார்.
இந்தியாவில் லியோனல் மெஸ்ஸி
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானியை சந்தித்தார். 
அவர் ஜாம்நகரில் வந்தாரா வனவிலங்கு மீட்பு மற்றும் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்டார். அப்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
ஏனெனில், சரணாலயத்திற்கு கைக்கடிகாரம் அணியாமல் வந்ததை கவனித்தவர்கள், பின்னர் அவர் கையில் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை அணிந்திருந்ததை கண்டபோது, இந்த அரிய பரிசு வெளிச்சத்திற்கு வந்தது.
அரிதான பரிசு
அந்த கைக்கடிகாரத்தின் பெயர் Richard Mile RM 003-V2 GMT Tourbillon 'Asia Edition' ஆகும். இது ஏன் அரிதான பரிசு என்றால், உலகிலேயே வெறும் 12 மட்டுமே உள்ள கைக்கடிகாரம் என்பதுதான். 
இது ஒரு கருப்பு கார்பன் கேஸ் மற்றும் திறந்த பாணி டயலைக் கொண்டுள்ளது. இதன் விலை சுமார் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.10.91 கோடி ஆகும். அனந்த் அம்பானி இதனை மெஸ்ஸிக்கு பரிசாக அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், அனந்த் அம்பானியும் மற்றொரு மிகவும் அரிதான கடிகாரமான Richard Mile RM 056 Sapphire Tourbillonஐ அணிந்திருந்ததைக் காண முடிந்தது.
இந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அதாவது கிட்டத்தட்ட ரூ.45.59 கோடி ஆகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |