ஆனந்த் அம்பானி திருமணம்: 3D பூக்களால் மிளிர்ந்த இஷா அம்பானி
குஜராத் ஜாம்நகரே கொண்டாட்டத்தில் களைகட்டியுள்ள நிலையில், முதலாம் நாள் கொண்டாடத்திற்காக இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆனந்த் அம்பானி
திருமணம் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி.
உலக பணக்காரர்களுள் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டிற்கும் மார்ச் முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரை கொண்டாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவித்திருந்தார்ககள்.
இந்நிலையில் இத்திருமணத்தின் முதலாம் நாள் கொண்டாட்டம் நேற்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முகநூல் நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் முதல் பில்கேட் வரை பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்.
இதன்போது இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இஷா அம்பானி ஆடை
இஷா அம்பானி தனது சகோதரர் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாடத்தில் பிரமிக்க வைக்கும் மென்மையான பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடையில் வந்துள்ளார்.
லண்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற உடை வடிவமைப்பாளரான மிஸ் சோஹியால் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்துள்ளார்.
பூந்தோட்டத்தின் நடுவே தோகையை விரித்தாடும் மயில் நிற்பது போல் 3D பூக்கள் டிசைன்களுக்கு நடுவே மயில் எம்பராய்டரி வைத்து அதை ஹைலைட் செய்யும் விதமாக ஸ்வரோஸ்கி க்ரிஸ்டல் கற்களை பதித்திருந்தது.
மேலும் இந்த திருமண விழாவில் மார்க் ஜூகர்பெர்க், பில்கேட்ஸ், தீபிகா பட்குகோன், ரன்வீர் சிங், ஆலியா பட், ரன்பீர் கபூர், அக்ஷய் கண்ணா, ஜான்வி கபூர், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, சாய்னா நேவால், ஷனாயா கபூர், அனன்யா பாண்டே, ஆதித்யா ராய் கபூர், ஹர்திக் பாண்டியா, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, வருண் த்வான், இவான்கா ஷ்ரத்தா கபூர், சைஃப் அலி கான், கரீனா கபூர் கான், நீது கபூர் மற்றும் மாதுரி தீட்சித் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |