ஆனந்த் அம்பானியின் Pre-Wedding நிகழ்ச்சியில் தென்னிந்திய உணவுகள்: சமைப்பது யார் தெரியுமா?
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் குறித்த செய்திகள் வராத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு, ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகியும், பகிரப்பட்டும் வருகின்றன.
அவ்வகையில், ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்துக்கு முந்தைய இரண்டாவது கொண்டாட்டங்களில் தென்னிந்த உணவுகளும் பரிமாறப்படுவதைக் குறித்த ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனந்த் அம்பானியின் Pre-Wedding நிகழ்ச்சியில் தென்னிந்திய உணவுகள்
தற்போது ஸ்பெயினில் நடைபெற்றுவரும் ஆனந்த் அம்பானியின் இரண்டாவது Pre-Wedding கொண்டாட்டங்களில் பெங்களூருவை மையமாகக் கொண்ட ராமேஷ்வரம் கஃபே உணவக ஊழியர்களும் தங்கள் பங்களிப்பைச் செய்கிறார்கள்.
ஆக, தென்னிந்த உணவுகளான பொடி இட்லி, மற்றும் பொடி தோசை முதலான உணவுகளும், Celebrity Ascent Cruise என்னும் ஆடம்பரக் கப்பலில் நடைபெறும் விருந்தில் பரிமாறப்படுகின்றனவாம்.
ராமேஷ்வரம் கஃபேயின் இணை நிறுவனரான ராகவேந்திர ராவ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள இடுகை ஒன்றில், இந்த தகவலைப் பதிவு செய்துள்ளார். அந்த இடுகை வேகமாக பகிரப்பட்டுவரும் நிலையில், ராமேஷ்வரம் கஃபே உணவக ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |