திருமண அழைப்பிதழில் தங்க, வெள்ளி சிலைகள் - வெளியான ஆனந்த் அம்பானியின் அழைப்பிதழ்
இந்திய பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பானி குடும்பத்தின் திருமணம்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் பற்றி தான் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
வருகிற ஜூலை மாதம் 12 திகதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இரண்டாவது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் நடுக்கடலில் ஒரு பயணக் கப்பலில் நடைபெற்றது.
முன்னதாக, ஆனந்த் அம்பானி (Anant Ambani) மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் முதல் திருமணத்திற்கு முந்தைய விழா மார்ச் 1 முதல் 3 வரை நடைபெற்றது.
இவை இரண்டும் கோடிக் கணக்கில் செலவிடப்பட்டு நடைபெற்ற திருமண விழா கொண்டாட்டங்களாகும்.
அந்தவகையில் தற்போது இவர்களுடைய திருமண அழைப்பிதழ் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஆனந்த் அம்பானியின் திருமண அழைப்பிதழ்
குறித்த திருமண அழைப்பிதழில் ஒரு கோயில் போன்ற பெட்டியைக் காணலாம், அதில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறிய கோயில் இருக்கிறது.
பெட்டிக்குள் சில தங்கம் மற்றும் வெள்ளி சிலைகளும் காணப்படுகிறது.
மேலும் இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |