ஆனந்த் அம்பானியின் திருமண ஆடையில் இருந்த வைர சிங்கம் - விலை எவ்வளவு தெரியுமா?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளுடன் தொடங்கி, நான்கு நாட்கள் ஐரோப்பிய சொகுசு பயணத்துடன் தொடர்ந்தது, இப்போது மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பிரமிக்க வைக்கும் ஆடைகள் மற்றும் திகைப்பூட்டும் நகைகளுடன் திருமண கொண்டாட்டங்கள் ஆடம்பரமாக நடந்தன.
அம்பானி திருமணமானது, பிரமாண்டமான மரகதங்கள் மற்றும் மாணிக்கங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நகை தனித்து நிற்கிறது.
அதாவது மணமகன் ஆனந்த் அம்பானியின் ஆடையில் இருந்த சிங்க சிலையாகும். அதன் விலையும் கோடிகளில் இருக்கும் என கூறப்படுகிறது.
திருமண ஆடையில் இருந்த வைர சிங்கம்
Panthere De Cartier ப்ரூச் ஆனது 51 சபையர்கள், இரண்டு மரகதங்கள் மற்றும் ஒரு ஓனிக்ஸ் வைரம் ஆகியவற்றை கொண்ட 18K தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரூச்சை ஆனந்துக்கு அவரது சகோதரர் ஆகாஷ் அம்பானி பரிசளித்ததாக கூறப்படுகிறது. மேலும் இதன் விலை பல கோடிகளில் இருக்கும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |