கோலாகலமாக நடைபெறும் ஆனந்த் அம்பானி திருமணம் - மும்பையில் அதிகரித்த ஹோட்டல் விலை
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் மும்பையில் ஹோட்டல் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
30 நாட்களில் முடி வளர்ச்சியை பல மடங்கு அதிகரிக்கும் செம்பருத்தி எண்ணெய் - வீட்டிலேயே செய்வது எப்படி?
ஆனந்த் அம்பானி திருமணம்
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் வருகிற 12 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.
அதற்கு முன்னதாக முந்தைய கொண்டாட்டங்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
குறித்த இரண்டு கொண்டாட்டத்திலும் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது சங்கீத் போன்ற பல சம்பிரதாய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அதிலும் அமிதாப் பச்சன், சல்மான் கான், ஷாருக் கான், ரன்வீர் கபூர், ஆலியா பட், எம்.எஸ். தோனி என பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு சில சொகுசு ஹோட்டலின் விலை அதிகரித்துள்ளது.
மும்பையில் அதிகரித்த ஹோட்டல் விலை
ஜூலை 14 அன்று ஒரு ஹோட்டல் ஒரு இரவுக்கு ரூ. 91,350-க்கு அறைகளை வழங்குவதாக சுற்றுலா மற்றும் ஹோட்டல் இணையதளங்கள் தெரிவிக்கின்றன, இது வழக்கமாக ஒரு இரவுக்கு ரூ. 13,000 ஆக இருந்தது.
விருந்தினர்களுக்கான சரியான தங்குமிடங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், ஹோட்டல் கட்டணங்கள் உயர்ந்துள்ளன.
பயண முன்பதிவு இணையதளங்களின்படி, Trident BKC இல் அறைக் கட்டணங்கள் பெருமளவில் மாறியுள்ளன.
ஜூலை 9 அன்று ஒரு இரவுக்கு ரூ. 10,250, வரிகள் ரூ. 16,750 மற்றும் ஜூலை 15 அன்று வரிகள் ரூ. 16,750, ஜூலை 16 அன்று ரூ. 13,750.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை முன்னிட்டு மும்பை போக்குவரத்து துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜியோ உலக மாநாட்டு மையத்திற்கு செல்லும் பல சாலைகள் மதியம் 1 மணி முதல் நள்ளிரவு வரை தடைசெய்யப்பட்டிருக்கும்.
நிகழ்வின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைப்பதே இந்த ஆலோசனையின் நோக்கமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |