ஆனந்த் அம்பானி திருமணம்: பிரமாண்ட விழாவுக்கு தயாராகிறது Jio World Centre!
இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த தயாராகி வருகிறது முகேஷ் அம்பானி குடும்பம்.
திருமண திகதி மற்றும் இடம்
அதன்படி, ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12ஆம் திகதி நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருமண விழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது, அனைத்து நிகழ்வுகளும் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ வேல்ட் சென்டரில்(Jio World Centre) நடைபெற இருக்கிறது.
இதே இடத்தில் தான் 2019ஆம் ஆண்டு ஆகாஷ் அம்பானியின் திருமணமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Jio World Centre
Jio World Centre என்பது 18.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பன்முக தளமாகும்.
இங்கு சர்வதேச மாநாட்டு மையம், ஹோட்டல்கள், இரண்டு ஷாப்பிங் மால்கள், நிகழ்கலை அரங்கம், ஓபன் ஏர் திரையரங்கம், அலுவலகங்கள் என பல்வேறு வசதிகள் உள்ளன.
Anant Ambani and Radhika’s Wedding to be held in Mumbai on 12th July at the Jio World Convention Centre in BKC. Wedding to be performed in accordance with the traditional Hindu Vedic way.
— ANI (@ANI) May 30, 2024
The main wedding ceremonies will start on Friday, 12th July with the auspicious Shubh… pic.twitter.com/YKnaAIAs7o
Jio World Centre உள்ள Jio World கார்டன் தான் திருமண விழாவின் பிரதான இடமாக இருக்கும். 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த திறந்தவெளி தளம், மேற்கு மும்பையில் மிகப்பெரிய திறந்தவெளி நிகழ்வு அரங்கமாக கருதப்படுகிறது.
இந்த சொகுசு பூங்காவில் விழாவிற்கு தேவையான அனைத்து வசதிகளும், 5000 கார்கள் மற்றும் SUVகளை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதியும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |