தாய் மாமன் சீர்வரிசையுடன் வந்தாச்சு.., களைகட்ட தொடங்கிய அம்பானி வீட்டு திருமணம்
அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் பிரம்மாண்டமான திருமணம் தாய் மாமன் சீர்வரிசையுடன் களைகட்ட தொடங்கியுள்ளது.
அம்பானி வீட்டு திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி தனது மகனின் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோரின் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.
அப்போது ஒவ்வொரு ஜோடிக்கும் தாலி, திருமண மோதிரங்கள் மற்றும் மூக்குத்தி, மற்றும் வெள்ளி ஆபரணங்கள், கால் மோதிரங்கள் ஆகிய பரிசுகளை வழங்கினர்.
மாமேரு சடங்கு
இந்நிலையில் குஜராத்தி திருமணங்களின் முக்கிய நிகழ்வான மாமேரு சடங்கானது (Mameru ceremony) முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இல்லத்தில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த சடங்கு என்பது மணமகளை அவரது தாய் மாமன் சீர்வரிசையுடன் சந்திக்கும் நிகழ்வாகும். அதாவது இந்த நிகழ்வில் பாரம்பரிய ஆடைகள், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் மணமகள் ராதிகாவுக்கு வழங்கப்படும்.
அதன்படி, இனிப்பு, புடவை, நகைகள் வெள்ளை நிற வளையல்கள் ஆகியவற்றுடன் வந்து தாய்மாமன் சந்தித்தார். இது, மணமகள் புதிய பயணத்தை தொடங்கும்போது தாய் வழி குடும்பத்தின் ஆசீர்வாதங்களை பெறுவதை குறிக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்காக முகேஷ் அம்பானியின் இல்லம் பூக்கள் மற்றும் விளக்குகளால் பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மணமகள் மற்றும் மணமகனின் கார்ட்டூன்கள் கொண்ட டிஜிட்டல் திரையும் வைக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |