300 வைரங்கள் பதிக்கப்பட்ட சிவன் கடிகாரம்., அனந்த் அம்பானியின் புதிய ஆடம்பர கலெக்ஷன்
இந்து கடவுளான சிவன் அமர்ந்திருப்பதைப் போன்ற அரிய வகை ஆடம்பர கைக்கடிகாரத்தை அனந்த் அம்பானி அணிந்து கவனத்தை ஈர்த்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையால் அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறார்.
சமீபத்தில் அவர் பெற்றுள்ள புதிய ‘Opera Godfather Baguette Shiva’ வாட்ச், உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த வாட்ச் 18K ரோஸ் கோல்டில் வடிவமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட வைரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதன் மையத்தில் சிறிய சிவபெருமானின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அது சக்தி, மாற்றம், பிரபஞ்ச ஆற்றலைக் குறிக்கிறது.
மேலும், இந்த கைக்கடிகாரம் ‘Flying Triple-Axis Tourbillon’ எனப்படும் மிகக் கடினமான இயந்திர அமைப்பைக் கொண்டுள்ளது. இது நேரத்தை மிகத் துல்லியமாக காட்ட உதவுகிறது.
இந்த ஆடம்பர கைக்கடிகாரத்தின் அதிகம் பேசப்படும் அம்சம், ‘The Godfather’ திரைப்படத்தின் பிரபலமான இசையை 120 நோட் மெக்கானிசம் மூலம் வாசிக்கும் திறன்
இதனால், இந்த கடிகாரம் நேரம் காட்டும் கருவி மட்டுமல்லாமல், ஒரு சிறிய இசைக்கருவியாகவும் மாறுகிறது.

இந்த கடிகாரம் பொதுவாக விற்பனைக்கு கிடைக்காது. Jacob & Co நிறுவனம் தனிப்பட்ட முறையில் பிரத்தியேகமாக உருவாக்கிய இந்த அரிய வாட்ச், பல மில்லியன் டொலர் மதிப்பில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனந்த் அம்பானியின் இந்த ‘Shiva’ வாட்ச், ஆடம்பரத்தையும், ஆன்மீகத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைக்கும் அரிய கலைப்படைப்பாகப் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#AnantAmbani #ShivaWatch #LuxuryTimepiece #JacobAndCo #GodfatherWatch #DiamondWatch #IndianLuxury