ஆனந்த் அம்பானி திருமணம்... முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்ற ஒரே ஒரு பிரபலம்
மிக ஆடம்பரமாகவும் கோலாகலமாகவும் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில், ஒரே ஒரு பிரபலத்தை மட்டும் முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்றுள்ளார்.
ஒரே ஒருவரை மட்டும்
அவருடன் மட்டும், தனியாக புகைப்படத்திற்கும் முகம் காட்டியுள்ளார் முகேஷ் அம்பானி. வணிகத்துறையில் இருக்கும் ஒருவர், கண்டிப்பாக ஒருமுறையேனும் முகேஷ் அம்பானியை சந்திக்க வேண்டும் என்பதை கனவாக கொண்டிருப்பார்கள்.
மட்டுமின்றி முகேஷ் அம்பானியின் செல்வாக்கு என்பது அவரது இளைய மகனின் திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களின் வரிசையை பார்வையிட்டாலே போதும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இந்த விழாவில், ஒரே ஒருவரை மட்டும் முகேஷ் அம்பானி வாசல் வரை சென்று வரவேற்றுள்ளார். அந்த நபரை வரவேற்று கைகுலுக்கிய பின்னர், அவரின் குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் முகேஷ் அம்பானி நேரம் செலவிட்டுள்ளார்.
செல்வாக்கு கொண்ட தம்பதி
அவர்கள் தாய்லாந்தின் பெரும் கோடீஸ்வரரான Dr Somsak Leeswadtrakul மற்றும் Khunying Patama Somsak Leeswadtrakul தம்பதி. வணிக உலகில் மட்டுமின்றி, தாய்லாந்து முழுக்க செல்வாக்கு கொண்ட தம்பதி இவர்கள்.
இதில் Patama Somsak Leeswadtrakul சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினரும் பெரும் நன்கொடையாளருமாக அறியப்படுகிறார். ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கலந்துகொண்ட இந்த தம்பதி, திருமண விழாவிற்கு என தயாரிக்கப்பட்ட உடையில் காணப்பட்டனர்.
பொதுவாக ஆனந்த் அம்பானி திருமண விழாவில் விருந்தினர்களின் உடைகள் உட்பட அனைத்தும் திருமண ஏற்பாட்டாளர்களே முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |