பிரதமர் பதவியில் இருந்து ஸ்டார்மர் விலக வேண்டும்: லேபர் கட்சி தலைவர் பகிரங்க அழைப்பு
சர் கெய்ர் ஸ்டார்மர் தனது பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் ஸ்காட்லாந்து லேபர் கட்சித் தலைவர் அனஸ் சர்வார் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்
பிரித்தானியாவில் நிலவி அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பிரித்தானிய பிரதமர் மற்றும் லேபர் கட்சி தலைவர் பதவியிலிருந்து சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்றும் ஸ்காட்லாந்து லேபர் கட்சியின் தலைவர் அனஸ் சர்வார்(Anas Sarwar) பகீர் அழைப்பு விடுத்துள்ளார்.
டவுனிங் ஸ்ட்ரீட்(பிரதமர் அலுவலகம்) தலைமையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அனஸ் சர்வார், ஸ்காட்லாந்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த இறுக்கமான முடிவை எடுத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த நிலைப்பாடு எளிதானது இல்லை, மிகவும் மன வேதனை தருவதாக உள்ளது என்று ஒப்புக் கொண்ட சர்வார், தனது வாக்காளர்கள் தான் செய்ய வேண்டிய கடமையே முதன்மையானது என உறுதியளித்துள்ளார்.
டவுனிங் ஸ்ட்ரீட் தோல்விகள் ஸ்காட்லாந்திலும் தொடர வழிவகை செய்து விட கூடாது என்றும், பிரித்தானியாவில் உள்ள தலைமை வெற்றிக்கு தடையாக இருப்பதாகவும் அனஸ் சர்வார் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டார்மரின் பதவி விலகலை சர்வார் முன்வைத்தாலும், ஸ்டார்மர் ஒரு நல்ல மனிதர் என்றும் பொது சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்றும் பாராட்டினார்.
பிரித்தானிய அரசியலில் குழப்பம்
உலக அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள எப்ஸ்டன் கோப்புகளில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர் பீற்றர் மாண்டல்சன் பெயர் இடம்பெற்று இருப்பது பிரித்தானியாவின் சமீபத்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீற்றர் மாண்டல்சனை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்காவின் தூதராக நியமித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
எப்ஸ்டன் கோப்புகளில் பீற்றர் மாண்டல்சன் பெயர் இடம்பெற்று இருப்பதுடன், எப்ஸ்டனிடம் பிரித்தானிய அரசு தொடர்பான தகவல்களையும் பீற்றர் மாண்டல்சன் பகிர்ந்து கொண்டதற்கான ஆதாரங்கள் மின்னஞ்சல்கள் கிடைத்து இருப்பது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |