முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது.., அண்ணாமலை வரவேற்பு
தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை.
பள்ளிக் கல்வித்துறை தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு, நாங்கள் DMK Files வெளியிட்டபோது, தமிழ்நாட்டில் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பாக நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அன்றைய திமுக அரசு உரிய விளக்கம் அளிக்கவில்லை. அந்த முதலீடும் தமிழகத்துக்கு வரவில்லை, முறைகேடான முதலீடு என்ற எங்கள் குற்றச்சாட்டுக்கும் இன்றுவரை பதில் இல்லை. திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்? இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
— K.Annamalai (@annamalai_k) October 27, 2026
திரு. அன்பில் மகேஷ் தொடர்பான உதயநிதி ஸ்டாலின் பெயரிலான அறக்கட்டளை, நோபல் குழுமத்தின் மற்றொரு நிறுவனமான நோபல் பிரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே முகவரியில் இயங்கி வந்ததாகக் கூறப்பட்ட தகவலுக்கும் இன்று வரை பதில் இல்லை. நோபல் பிரிக்ஸ் நிறுவனத்திற்கும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் இடையே என்ன தொடர்பு? அந்த நிறுவனத்தின் ₹1,000 கோடி முதலீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன பதில்?
இந்த விவகாரத்திலும் தவெக அரசு வெளிப்படையான விசாரணை நடத்தி, உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |