ரூ.100 கோடி மோசடி புகார்.., அன்பில் மகேஷின் உதவியாளர் நீதிமன்றத்தில் சரண்
அன்பில் மகேஷின் உதவியாளர் முத்துகுமார் உச்சநீதிமன்றம் சென்றும் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து சரணடைந்தார்.
நீதிமன்றத்தில் சரண்
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக தனியார் பள்ளிகள் சங்கம் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அன்பில் மகேஷின் உதவியாளர் முத்துக்குமார், முன்ஜாமீன் கோரிய நிலையில் உச்சநீதிமன்றமும் நிவாரணம் வழங்க மறுத்தது.
இதையடுத்து, அன்பில் மகேஷின் உதவியாளர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |