ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு தான் காரணமா?- அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Anbumani Ramadoss Tamil nadu
By Yashini Oct 28, 2026 09:54 AM GMT
Report

anbumani ramadoss condemnation environment minister- திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் வே.க.ராஜீவ், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு ஷாம்பு, சோப்பு போன்றவைதான் காரணம் என்று கூறியிருந்தது பேசுபொருளாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடுதான் காரணம் என்று நகைச்சுவையாகப் பேசுவதைத் தவிர்த்து, ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பு தான் காரணமா?- அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் | Anbumani Ramdas Condemnation Environment Minister

வெளியிட்ட அறிக்கை..,

ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணமா? யாருடைய குரலாக ஒலிக்கிறார் சுற்றுச்சூழல் அமைச்சர்?

திருப்பூரில் ஓடும் நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பெருக்கெடுப்பதற்கு சோப்பு மற்றும் ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என்று அமைச்சர் மருத்துவர் வி.கே. இராஜிவ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கருத்தைக் கூறியிருப்பவர் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தான் வருத்தமும் கவலையும் அளிக்கிறது.

நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை பொங்குவதற்கு காரணம் கழிவுகள் கலக்கவிடப்படுவது தான் என்பது சிறு குழந்தைகளும் அறிந்தது தான். கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கட்டுப்பாடின்றி கலக்கவிடப்படுவது தான் அதில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் ஆகும். நொய்யலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணையில் சாயப்பட்டறைக் கழிவுகள் கலந்திருப்பது தான் அந்த அணையைக் திறக்கக் கூடாது என உழவர்கள் போராட்டம் நடத்துவதற்கு காரணம் என்பதும் பெரும்பான்மையினர் அறிந்தது தான்.

தென்பெண்ணை ஆற்றில் கெலவரப்பள்ளி அணையில் நுரை பெருக்கெடுப்பதற்கு காரணம் கர்நாடகத்தில் அந்த ஆற்றில் கலக்கவிடப்படும் கழிவுகள் தான். இந்த இரு ஆறுகளிலும் கழிவுகள் கலக்கவிடப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆறுகளை பலமுறை நான் நேரில் ஆய்வு செய்து அறிவுறுத்தியுள்ளேன். உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு பல ஆணைகளை பிறப்பித்திருக்கிறது.

இவ்வளவுக்குப் பிறகும் அந்த ஆறுகளை தூய்மைப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவரே இவ்வாறு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சுற்றுச்சூழல் அமைச்சர் இந்தக் கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருப்பூர் காசிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்புகளை ஆய்வு செய்த அவர், திருப்பூரில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன என்று பாராட்டியது மட்டுமின்றி, சாய ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பிறகு இவ்வாறு கூறியிருக்கிறார். அதை வைத்து பார்க்கும் போது தான் அமைச்சர் யாருடைய குரலாக ஒலிக்கிறார் என்ற ஐயம் ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் சாயப்பட்டறை, நகரக் கழிவுகள், திடக்கழிவுகள் உள்ளிட்ட பல வகையான கழிவுகள் கலப்பதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் ஆறுகளில் நுரை பொங்குவதற்கு சோப்பு, ஷாம்பு பயன்பாடு தான் காரணம் என நகைச்சுவை செய்வதை விடுத்து ஆறுகளைப் பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        

  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US