விவாகரத்தான நடிகரை திருமணம் செய்ய ஆசைப்படும் DD
விவாகரத்தான பிரபல நடிகரை திருமணம் செய்ய ஆசை என பிரபல தொகுப்பாளினி டிடி கூறியது வைரலாகி வருகிறது.
தமிழ் ரசிகர்களுக்கு தொகுப்பாளினி டிடி பற்றிய அறிமுகம் தேவையில்லை, இப்படித்தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வேண்டும் என டிடியை பார்த்து தெரிந்து கொண்டவர்கள் ஏராளம்.
20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக, நடிகையாக மக்கள் மனதில் முத்திரை பதித்து விட்டார்.
இவர் தனது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்தை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடந்த இவரது திருமணத்தில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
சில மாதங்களிலே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விட்டனர், கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பூர்வமாகவும் விவாகரத்து பெற்றனர்.
விவாகரத்துக்கு காரணம் என்னவென்று இருவரும் வெளிப்படையாக பேச தயாராகயில்லை.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுடன் டிடி உரையாடிக் கொண்டிருந்தபொழுது ரசிகர்களில் ஒருவர் உங்களுடைய க்ரஸ் யாரென்று கேட்டகேள்விக்கு, ஹிர்திக் ரோஷன் என்றும் அவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பள்ளி கல்லூரிகளில் படிக்கும்பொழுது பாலிவுட் நடிகர்களில் யார் பிடிக்கும் என்று கேட்டால் ஹிரித்திக் ரோஷன் என்று தான் கூறுவேன் என்றார்.
அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் ஏன் ஹிரித்திக் ரோஷனை திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற கேள்விக்கு நான் தயார், ஆனால் அவருக்கு ஓகே வா என்று கேட்கவேண்டும் என்றார்.
திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு மைல்கல் அல்ல. இது இல்லாமல் நீங்கள் வாழ முடியாது என்று அர்த்தமல்ல. விருப்பமுள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். அது பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட்டு திரும்பி வந்து சுதந்திரமாக வாழலாம் என தன்னுடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார் டிடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |