பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் சொத்துமதிப்பு.., எத்தனை கோடிகள் தெரியுமா?
பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வருபவர்.
எஸ்.ஆர்.எம் கல்லூரி மாணவியான இவர் காலேஜில் படித்துக் கொண்டே பகுதி நேரத்தில் தொகுப்பாளாராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் மணிமேலை, துணை நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு சன் மியூசிக்கில் இருந்து விலகியவர் விஜய் டிவியில் மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி, அதன் பின் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதுத்தவிர தனது கணவருடன் சேர்ந்து யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 2 மில்லியன் பின்பற்றுபவர்கள் உள்ள ஹுசைன் - மணிமேகலையின் சேனலின் வீடியோ பதிவுகளை 10 லட்சம் பேர் வரை பார்க்கின்றனர்.
மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது ஒரு எபிசோடுக்கு ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்தார்.
ஹுசைன் - மணிமேகலை இருவரும் இப்போது புதிதாக ஒரு பண்ணை வீடு கட்டி வருகிறார்கள். அந்த வீட்டின் புகைப்படங்களை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் சென்னையில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதியதாக ஒரு வீடு சொந்தமாக வாங்கி அதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரகப்பிரவேசம் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹுசைன் - மணிமேகலை இவர்களுடைய சொத்து மதிப்பு ரூ. 7 கோடி வரை இருக்கும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |