VJ பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு திருமணம் முடிந்தது - மாப்பிள்ளை யார் தெரியுமா?
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டேவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
சூப்பர் சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வழங்கியுள்ளார்.
மேலும், பிக்பாஸ் சீசன் 5, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரியங்காவிற்கு வசி என்பவருடன் ரகசியமாக திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Happy married Life nga ❤️ @Priyanka2804 #priyankadeshpande #priyanka #MarriedLife pic.twitter.com/atP5vMXwVV
— Mani (@manikpc2000) April 16, 2025
இவரின் திருமண புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், இது குறித்து பிரியங்கா எந்த தகவலும் அளிக்காத நிலையில், கணவருடன் உள்ள புகைப்படத்தை விரைவில் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.