என் ஊர்ல நான் தான் ராஜா! விக்கெட்டுகளை அள்ளிய ஆண்டர்சன்: ஆல் அவுட் ஆன இந்தியா
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 364 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 83 ஓட்டங்களும், கே.எல்.ராகுல்(129), விராட் கோஹ்லி(42) மற்றும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 40 ஓட்டங்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த போட்டி துவங்குவதற்கு முன்பு, ஆண்டர்சனின்(39) வயதை குறிப்பிட்டு, அவர் உடல்நிலை ஒத்துவரவில்லை, காயம் போன்ற காரணங்களால் விளையாடமாட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
ஆனால், அதை எல்லாம் பொய்யாக்கும் வகையில், என் ஊரில் நான் தான் ராஜாடா என்பது போல், கெத்தாக 29 ஓவர்கள் வீசி அதில் 7 மெய்டன் 62 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதில் குறிப்பாக இங்கிலாந்து அணியை தன்னுடைய பேட்டிங் மூலம் மிரட்டி வந்த ரோகித்சர்மாவை தன்னுடைய துல்லியமான பந்துவீச்சின் மூலம் போல்டாக்கினார். அதன் பின்னர் தான் இங்கிலாந்து அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தது.