இங்கிலாந்து அணிக்கு திரும்பும் வேகப்புயல்கள்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் கழட்டி விடப்பட்டனர்.
இந்த நிலையில் தான் நியூசிலாந்தின் முன்னாள் வீரரான பிரண்டன் மெக்கல்லம், இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்து அடுத்தபடியாக நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரன், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் காயமடைந்துள்ளதால் அனுபவம் வாய்ந்த வீரர்களான ஆண்டர்சன், பிராட் இந்த தொடரில் களமிறங்க உள்ளனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 169 டெஸ்ட் போட்டிகளில் 640 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பிராட் 152 டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி:
- பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்)
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
- ஜோனதன் பேர்ஸ்டோ
- ஸ்டூவர்ட் பிராட்
- ஹேரி ப்ரூக்
- ஸாக் கிரவ்லி
- பென் போக்ஸ்
- ஜாக் லீச்
- அலெக்ஸ் லீஸ்
- கிரேஜ் ஓவெர்ட்டன்
- மேத்தீவ் போட்ஸ்
- ஒல்லே போப்
- ஜோ ரூட்