கோலிக்கு டாட்டா சொல்லி அசிங்கப்படுத்திய இங்கிலாந்து ரசிகர்கள்! பழி தீர்த்த இங்கிலாந்து: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், கோஹ்லி அவு ஆன போது, அங்கிருந்த ரசிகர்கள் செய்த செயலின் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, லீட்ஸில் இருக்கும் Yorkshire மைதானத்தில் நேற்று துவங்கியது. அதன் படி முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், 78 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதன் பின் முதல் இன்னிங்ஸி ஆடிய இங்கிலாந்து அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.
We think @jimmy9 enjoyed this one! ?
— England Cricket (@englandcricket) August 25, 2021
Scorecard/Videos: https://t.co/UakxjzUrcE
??????? #ENGvIND ?? pic.twitter.com/3zGBCmJlhQ
துவக்க வீரர்களான Rory Joseph Burns 62 ஓட்டங்களுடனும், Haseeb Hameed 60 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஆன விராட் கோஹ்லி 7 ஓட்டங்களில், ஆண்டர்சன் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.
அப்போது இங்கிலாந்து வீரர்கள் எந்த அளவிற்கு ஆக்ரோசத்தை வெளிப்படுத்தினார்களோ, அதே அளவிற்கு மைதானத்தில் இருந்த இங்கிலாந்து ரசிகர்களும் கோஹ்லி அவுட்டை கொண்டாடினர்.
Cheerio Virat ?
— England's Barmy Army (@TheBarmyArmy) August 25, 2021
Jimmy has 3 in the first hour ?#ENGvIND pic.twitter.com/OSM9jBe4DS
இதில் குறிப்பாக அங்கிருந்த சில இங்கிலாந்து வீரர்கள் கோஹ்லியை அசிங்கப்படுத்தும் வகையில், டாட்டா என்று செய்கை மூலம் செய்து காட்டினர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் கடும் ஆக்ரோசத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றனர்.
குறிப்பாக ஆண்டர்சனை தான் இந்திய வீரர்கள் டார்கெட் செய்தனர். அதன் காரணமாகவே இங்கிலாந்து அணி மற்றும் இங்கிலாந்து ரசிகர்கள் இந்தியாவின் ஒவ்வொரு விக்கெட்டை கொண்டாடி வருகின்றனர்.