சொந்த மண்ணில் 100 டெஸ்ட்! 40 வயதில் மிரட்டல் சாதனை படைத்த வீரர்
உலகளவில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் தன்னகத்தே வைத்துள்ளார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆண்டர்சன் 32 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி சொந்த மண்ணில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு 100வது டெஸ்ட் ஆகும். இதன்மூலம் சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
100th home Test.
— England Cricket (@englandcricket) August 25, 2022
From his own end.
Wicket number 421 at home.
Live clips: https://t.co/e4go7z2x78
??????? #ENGvSA ?? pic.twitter.com/AY1nM5kcwZ
மொத்தமாக 174 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 661 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு டெஸ்டில் 10 விக்கெட்டுகளை 3 முறையும், 5 விக்கெட்டுகளை 32 முறையும் அவர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The first cricketer ever to play 100 Tests on home soil ? @Jimmy9 | #EnglandCricket pic.twitter.com/SaAipgRxeD
— England Cricket (@englandcricket) August 25, 2022