ரிஷப் பாண்ட் ஷாட்டைக் கண்டு மிரண்டு போன ஆண்டர்சன்! தேடி எடுத்து வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள்
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பாண்ட்டின் ஒரு ஷாட்டைக் கண்டு, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் மிரண்டு போன வீடியோ கடந்த சில நாட்களாகவே வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்று வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
Wow @RishabhPant17 ??? pic.twitter.com/389yVwgXPz
— Andrew Flintoff (@flintoff11) March 5, 2021
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பாண்ட், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரும், டெஸ்ட் அரங்கின் சிறந்த பவுலர்களில் ஒருவரான ஆண்டர்சன் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அசத்தினார்.
இதைக் கண்ட ஆண்டர்சர் கொஞ்சம் அசந்தே போனார், அந்த காட்சியை மட்டும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.