எதிரணி கேப்டனின் ஸ்டம்பை பறக்கவிட்ட ஆண்டர்சன்! 40 வயதில் மிரட்டல் பந்துவீச்சின் வீடியோ
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்
எல்கரின் விக்கெட் ஆண்டர்சனுக்கு 662வது டெஸ்ட் விக்கெட் ஆகும்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டின் மூன்றாவது நாளில், ஆண்டர்சன் தனது பந்துவீச்சில் கேப்டன் எல்கரை போல்டாக்கினார்.
ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இந்தப் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்காவின் டீன் எல்கர், சரேல் எர்வீ ஆகியோர் களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்தின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய ஓவரில் எல்கர் கிளீன் போல்டானார். அவரது வேகத்தில் ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.
He is something else ?
— England Cricket (@englandcricket) August 27, 2022
Sound on! ?
Scorecard/clips: https://t.co/e4go7z2x78
??????? #ENGvSA ?? pic.twitter.com/lSlJ7CZJYj
இதுதொடர்பான வீடியோ இங்கிலாந்து கிரிக்கெட் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.