கொரோனாவால் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே துடி துடித்து இறந்த பெண்! கண்கலங்க வைக்கும் பின்னணி

Women Hospital Coronavirus AndhraPradesh
By Kaviarasan Apr 29, 2021 04:34 AM GMT
Report

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலம் தெருக்கள் மற்றும் வீட்டிற்குள்ளும் கிடப்பதால், உறவினர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. இவருக்கு கிரிதர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், சுப்பம்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், அவர் அங்கிருக்கும் சாய் நகர் காலனியில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருடைய மகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் வெளிப்பட துவங்கின. எனவே கிரிதர் தனக்கும் கொரோனா பெரும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் உடல்நிலை மோசமடைந்து சுப்பம்மா உயிரிழந்தார். வீட்டில் இருந்து வெளியே வர இயலாத நிலையிலிருக்கும் கிரிதர் உறவினர்கள்,அதிகாரிகள் ஆகியோருக்கு தன்னுடைய தாயின் மரணம் பற்றி தகவல் அளித்து உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால் சுப்பம்மாவின் உடலை எடுத்துச்சென்று அடக்கம் செய்ய உறவினர்கள் முன்வரவில்லை. அதேபோல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் செவ்வாய் கிழமை இரவு முதல் தன்னுடைய தாயின் உடலை அடக்கம் செய்ய அரசிடமிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும் என்று வீட்டிற்குள்ளேயே அவருடைய உடலை வைத்து கொண்டு மகன் கிரிதர் காத்துகிடந்துள்ளார்.

கொரோனாவால் மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே துடி துடித்து இறந்த பெண்! கண்கலங்க வைக்கும் பின்னணி | Andhra Corona Women Died In Front Of Hospital

அதே போல ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்த அஞ்சலி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியது. அப்போது அஞ்சலியின் குடும்பத்தினர் போன்பே, கூகுள் பே அல்லது டெபிட் கார்டு ஆகியவற்றின் மூலம் பணம் செலுத்துகிறோம் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் இங்கு ஒன்லி கேஸ் பேமெண்ட், நோ ஆன்லைன் பேமென்ட் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால், வேறு வழி இல்லாமல் கொரோனா பாதிப்புக்குள்ளான அஞ்சலியை மருத்துவமனையின் வெளியே உட்கார வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் பணம் திரட்ட சென்றுவிட்டனர்.

மூன்று மணி நேரம் அங்கும் இங்கும் சுற்றி திரிந்து சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டி கொண்டு மருத்துவ மனைக்கு வந்த உறவினர்கள், மருத்துவமனைக்கு வெளியே அஞ்சலி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவருடைய உடலை அங்கிருந்து எடுத்துச்செல்ல எவரும் முன் வராத நிலையில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் ராஜேஷ், ராஜன் ஆகிய இருவரும் இறுதி யாத்திரை வாகனத்தை அழைத்து வந்தனர். கொரோனா பாதுகாப்பு உடையணிந்து கொண்ட அவர்கள் அஞ்சலியின் உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து அந்த வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US