நாவூறும் சுவையில் ஆந்திரா நண்டு கிரேவி.., இலகுவாக செய்வது எப்படி?
சூடான சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என அனைத்திற்கும் சாப்பிட இந்த நண்டு கிரேவி அருமையாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க நண்டு உணவை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் ஆந்திரா நண்டு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்-2
- இஞ்சி- 1 துண்டு
- பூண்டு- 5 பல்
- பச்சை மிளகாய்- 2
- மிளகு- ½ ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 2
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- நண்டு- 3
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தக்காளி- 1 புளி- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
பின் அதில் கழுவி வைத்த நண்டு சேர்த்து வாதக்கி அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
இதற்கிடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி சேர்த்து அரைத்து இதில் சேர்த்து வதக்கவும்.
பின்னர் இதில் புளி கரைசலை சேர்த்து பச்சை வாசனை போதும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான ஆந்திரா நண்டு கிரேவி தயார.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |