மகனுக்கு திருமண ஏற்பாடு செய்துகொண்டிருந்த பெற்றோர்: கிடைத்த அதிரவைக்கும் செய்தி
அமெரிக்காவில் பணியாற்றிவந்த இந்தியர் ஒருவர், மாரடைப்பால் பலியாகியுள்ளார்.
இந்திய இளைஞர் மாரடைப்பால் பலி
அமெரிக்காவின் அர்க்கன்சாஸ் மாகாணத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்தவர், அபய் பட்னாலா (32).

இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த அபய், 2014ஆம் ஆண்டு உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்கா சென்ற நிலையில், அங்கேயே அவருக்கு மென்பொருள் பொறியாளராக வேலை கிடைத்துள்ளது.
அமெரிக்காவிலேயே வீடு ஒன்றை வாங்கி, தன் தம்பியுடன் அங்கு வாழ்ந்துவந்தார் அபய்.
அவரது குடும்பத்தினர் அவரது திருமணத்துக்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்க, அவர் அடுத்த ஏப்ரலில் இந்தியா திரும்புவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று, அதாவது, நவம்பர் மாதம் 21ஆம் திகதி, அபய்க்கு மாரடைப்பு ஏற்பட, அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் அபய்.
அபயின் பெற்றோர் மகனுடைய திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அறிந்து அவரது குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
அபயின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகளில் அவரது தம்பியான ராகுல் ஈடுபட்டுவருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |