ஆந்திரா ஸ்பெஷல் சிக்கன் கார பொடி.., எப்படி செய்வது?
ஆந்திரா உணவு வகைகள் அவற்றின் காரசாரமான மற்றும் சுவையான பாரம்பரியத்திற்கு புகழ்பெற்றது.
அதன்படி, இந்த சிக்கன் கார பொடியை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், காரசாரமான சிக்கன் கார பொடி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன்- ¼kg
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- மிளகாய் தூள்- ¼ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- வெங்காயம் - 1
- பூண்டு- 1
- காய்ந்த மிளகாய்- 6
- கறிவேப்பிலை- 1 கொத்து
- காஷ்மீரி மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- தனியா தூள்- 1 ஸ்பூன்
- கல்லுப்பு- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எலும்பில்லாத சிக்கன், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பூண்டு பல், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயை தனித்தனியாக சேர்த்து பொன்னிறமாக பொறித்து எடுத்துக்கொள்ளவும்.

இதனைத்தொடர்ந்து ஊறவைத்த சிக்கனை சேர்த்து பொன்னிறமாக பொறித்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பொரித்த சிக்கன் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
தொடர்ந்து அதில் பொரித்த வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், கல்லுப்பு, மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இதனை சூடான சாதத்தில் நெய் சேர்த்து பிணைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |