ஆந்திரா மக்களின் முறையில் சுவையான முட்டை குழம்பு செய்வது எப்படி?
Healthy Food Recipes
Andhra Pradesh
Egg
By Kirthiga
முட்டை கறி என்பது ஒரு காரமான தென்னிந்திய கறியாகும்.
இது வெங்காயம், தக்காளி மசாலா மற்றும் வேக வைத்த முட்டை வைத்து தயார் செய்யப்படுகிறது.
முட்டை கறியை சாதம், ரொட்டி போன்றவற்றுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். அந்த கறியை எப்படி ஆந்திர மக்களின் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையானவை
- முட்டைகள்
- புளி
- வெந்தய இலை
- வெங்காயம்
- தக்காளி
- கொத்தமல்லி
- பச்சை மிளகாய்
- கடுகு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- மஞ்சள் தூள்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- தண்ணீர்
- உப்பு
செய்முறை
- முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின் புளியை 100 மில்லி லிட்டர் தண்ணீரில் கரைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து முட்டையை வறுக்கவும்.
- பிறகு அதே பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெங்காயத்தை வதக்கவும்.
- அடுத்ததாக நறுக்கிய தக்காளி மற்றும் வெந்தய இலைகள் சேர்த்து வதக்கவும்.
- பின் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
- இதையடுத்து கரைத்து வைத்த புளி தண்ணீர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
- இறுதியாக உப்பும் வேக வைத்த முட்டையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து எடுக்கவும்.
- பரிமாறும் வேளையில் கொத்தமல்லி இலை தூவினால் ஆந்திரா முறையில் முட்டை குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US