ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி?
Red Chilli
By Kirthiga
ஆந்திரா ஸ்டைல் உணவு என்றாலே காரமாகவும் சுவையாகவும் இருக்கும். அதிலும் சிக்கன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.
அந்தவகையில், ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கனை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கனை ஊறவைக்க
-
சிக்கன் - 1 கிலோ
-
உப்பு - 1 தேக்கரண்டி
-
எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழத்தின் சாறு
- இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி
- தயிர் - 1 மேசைக்கரண்டி
-
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
-
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
- வெங்காயத்தின் விழுது - 2
- வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது
கிரீன் சில்லி சிக்கன் செய்ய
-
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
-
கடுகு
-
சீரகம்
- கறிவேப்பிலை
-
கொத்தமல்லி இலை - 1 சிறிய கட்டு
-
பச்சைமிளகாய்
- உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
- பாத்திரத்தில் சிக்கன், உப்பு, எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பின்பு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், வெங்காய விழுது, நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- பின்பு ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் வேகவிடவும்.
- மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
- பின்பு அரைத்த மசாலாவை சிக்கனில் சேர்த்து கலந்து தண்ணி வற்றி வரும் வரை வேகவிடவும்.
- கடைசியாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
- ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US