ஆந்திரா பாணியில் வீட்டிலேயே நல்ல காரம் பொடி செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Kirthiga
காரத்திற்கு பெயர் போன இடம் என்றால் அது ஆந்திரா மாநிலம் தான். இந்த இடத்தில் இருக்கும் மக்கள் அதிகமாக காரத்தை தான் தங்களது உணவில் சேர்த்துக்கொள்வார்கள்.
அந்தவைகயில் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் ஆந்திரா பாணியில் வீட்டிலேயே நல்ல காரம் பொடி எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி - 3 தேக்கரண்டி
- மிளகாய் - 12
- சீரகம் - 1 தேக்கரண்டி
- புளி
- பூண்டு பல் - 12
- கல்லுப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
செய்முறை
- முதலில் கடாயில் எண்ணெயை சூடாக்கி கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்.
- அடுத்து இரண்டும் நிறம் மாறிய பிறகு கொத்தமல்லி, சிவப்பு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இப்போது சீரகத்தை சேர்த்து வறுக்கவும்.
- பச்சை வாசனை போன பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியைச் சேர்த்துக் வறுக்கவும்.
- இதையெல்லாம் சிறிது நேரம் வதக்கிய பின் தனியாக வைத்து முழுவதுமாக ஆறவிடவும்.
- அதே கடாயின் உள்ளே தோலுடன் இருக்கும் பூண்டு பற்களை சேர்த்து வறுத்து எடுத்து ஆறவிடவும்.
- பூண்டும் மட்டும் தட்டி எடுத்து கொள்ளவும். ஆறிய அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து, சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.
- இறுதியாக நெய்யில் கலந்து இட்லி மற்றும் தோசைகளில் சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US