ஆந்திராவில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு
ஆந்திர மாநிலத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டுள்ள விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்து
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதிக் கொண்டு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
குண்டூரில் இருந்து புறப்பட்டு ராயகடா நோக்கி சென்று கொண்டு இருந்த விரைவு ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து பலாசா நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே பலாசா நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த விரைவு ரயில் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் 19 பேர் வரை உயிரிழந்து இருப்பதாகவும், பலர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் இரங்கல்
இந்நிலையில், ஆந்திராவில் ஏற்பட்டுள்ள இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |