உடல் வலுவிற்கு ஆந்திரா உளுந்து லட்டு: எப்படி செய்வது?
உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன.
உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், சத்தான ஆந்திரா உளுந்து லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து- 2 கப்
- கருப்பு உளுந்து- ½ கப்
- நெய்- 1 கப்
- ஏலக்காய்- 3
- அரிசி- 5 ஸ்பூன்
- நாட்டு வெல்லம்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் உளுந்து பருப்பு போட்டு வறுத்து பின் கருப்பு உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அடுத்து நெய் ஊற்றி வறுக்கவும். இறுதியாக அரிசி சேர்த்து ஒபொன்னிறமாக வறுக்கவும்.
பின் இதனை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு பவுடர் போல அரைக்கவும்.
அரைத்த பிறகு அதில் பாதியை எடுத்துவிட்டு வெல்லம், ஏலக்காய் சேர்த்து மீண்டும் அரைக்கவும்.
அடுத்ததாக ஒரு கப் நெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதை அரைத்து வைத்திருக்கும் மாவில் மீது ஊற்றி லட்டு பிடித்தால் சுவையான ஆந்திரா உளுந்து லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |