LPL 2024: காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிராக அதிரடி அரைசதம்! அடித்து நொறுக்கிய கண்டி வீரர்
காலி மார்வெல்ஸ் அணிக்கு எதிராக கண்டி ஃபால்கன்ஸ் வீரர் ஆந்த்ரே ஃபிளெட்சர் அரைசதம் விளாசினார்.
தம்புலாவில் கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையிலான LPL டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற காலி (Galle) அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி கண்டி ஃபால்கன்ஸ் முதலில் களமிறங்கியது.
தொடக்க வீரர் ஆந்த்ரே ஃபிளெட்சர் (Andre Fletcher) அதிரடியில் மிரட்டினார். சிக்ஸர், பவுண்டரிகள் என தெறிக்கவிட்ட அவர் 34 பந்துகளில் அரைசதம் அடித்தார். மொத்தம் 36 பந்துகளை எதிர்கொண்ட ஃபிளெட்சர் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆந்த்ரே ஃபிளெட்சர் கொழும்பு அணிக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் 47 ஓட்டங்கள் விளாசியிருந்தார்.
Fletcher Strikes ?
— LPL - Lanka Premier League (@LPLT20) July 7, 2024
Andre Fletcher hits a solid half-century but gets out immediately after. A crucial knock for the Falcons! ?? #LPL2024 pic.twitter.com/DKElD1hh5y
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |