ஒரே அடி தான்...சிக்ஸர் அடித்துவிட்டு கெத்து காட்டிய வீரர்! மிரண்டு போன பொல்லார்ட்: வைரலாகும் வீடியோ
மேற்கிந்திய தீவில் நடைபெற்று வரும் கரீபியன் லீக் தொடரில் ஆண்ட்ரூ பிளட்சர் அடித்த சிக்ஸர் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் போன்றே, மேற்கிந்திய தீவில் Caribbean Premier League தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.
அதன் படி இந்தாண்டிற்கான தொடர் அங்கு பார்வையாளர்கள் அனுமதியின்றி, கொரோனா விதிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 29-ஆம் திகதி Saint Lucia Kings மற்றும் Trinbago Knight Riders அணிகள் மோதின.
இப்போட்டியில், Saint Lucia Kings அணிக்காக விளையாடி வரும் Andre Fletcher 25 பந்தில் 28 ஓட்டங்கள் குவித்தார். குறிப்பாக ஆட்டத்தின் 4.5 -வது பந்தை வேகப்பந்து வீச்சாளர் உசுரு உடானா(இலங்கை வீரர்) வீச, அப்போது Andre Fletcher பந்தை ஒரு குத்து மதிப்பாக கணித்து சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
A FIFER for Isuru Udana sees him win the @Dream11 MVP for match four. #CPL21 #CricketPlayedLouder #TKRvBR #Dream11 pic.twitter.com/8CKpn0HJ4b
— CPL T20 (@CPL) August 28, 2021
அவர் பந்து சிக்ஸருக்கு சென்ற பின்பும் கூட அவர் பந்தை பார்க்கவில்லை. இதைக் கண்ட ரசிகர்கள், பந்தை பார்க்கமாலே சிக்ஸர் அடித்த வீடியோ என்று வைரலாக்கி வருகின்றனர்.
இப்போட்டியில் முதலில் ஆடிய Saint Lucia Kings அணி 20 ஓவர் முடிவில் 157 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய Trinbago Knight Riders அணி 20 ஓவர் முடிவில் 152 ஓட்டங்கள் எடுத்து, 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.