இரண்டு உலகக்கிண்ணங்கள், அது ஒரு வித்தியாசமான உணர்வு: ஓய்வுபெற்ற ஆந்த்ரே ரஸல்
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற ஆந்த்ரே ரஸல், தனது சிறந்த தருணங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஆந்த்ரே ரஸல்
மேற்கிந்திய தீவுகளின் மிரட்டலான ஆல்ரவுண்டரான ஆந்த்ரே ரஸல் (Andre Russell) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
எனினும் அவர் ஏனைய கிளப் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாகவும் அறிவித்தார்.
இந்த நிலையில் சிறந்த தருணங்கள் குறித்து கூறுகையில், "நிச்சயமாக 2016 உலகக்கிண்ண தொடர் என்னுடைய சிறந்த தருணம். இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டம், அதில் நான் அணியை வீட்டிற்கு அழைத்து வந்தேன். என்னையும் லெண்டில் சிம்மன்ஸையும், மற்ற துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற தொடக்கமும் கூட" என்றார்.
மேலும் அவர், "வெளிப்படையாக இரண்டு உலகக்கிண்ணங்கள், அது ஒரு வித்தியாசமான உணர்வு.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரிக்கெட்டுக்கு வெளியே சாதித்துவிட்டேன்.
எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும், மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, என்னால் முடிந்ததைச் செய்தேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |