இளவரசர் ஆண்ட்ரூ கைது: பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தகவல்
பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியும் பதவி இழந்த இளவரசருமான ஆண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
அதிரவைக்கும் பல தகவல்கள்
நேற்று தனது 66ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஆண்ட்ரூ, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் காலை 8.00 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், மாலை மணி 6.50க்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஆண்ட்ரூ கைது தொடர்பில் அதிரவைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலாவதாக, ஆண்ட்ரூ கைது குறித்து முன்னரே பக்கிங்காம் அரண்மனைக்கு தகவலளிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஆண்ட்ரூவின் கைது மன்னரை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்ட்ரூவின் கைது பிரித்தானியாவில் மட்டுமல்ல, அவரது கைதுக்குக் காரணமாக எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்ட அமெரிக்காவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை என குரல்கள் அங்கும் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
மேலும், ஆண்ட்ரூவின் கைது மன்னருக்கு மட்டுமல்ல, இளவரசர் வில்லியம், கேட் தம்பதியர், ஆண்ட்ரூவின் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ஆகியோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விடயம் என்னவென்றால், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மன்னராட்சியை கடுமையாக எதிர்த்துவருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராஜகுடும்பத்தில் ஒரு மூத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால், அது, ராஜகுடும்பத்துக்கு ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பும், ஆண்ட்ரூ கைது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, ’இது ராஜகுடும்பத்துக்கு மிகவும் கெட்ட விடயம் என நினைக்கிறேன்’ என்றும், ’எனக்கு அது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ள விடயம்’ என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |