உலகக்கோப்பையில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய கேப்டன்! மிரட்டலான அரைசதம்
லிவிங்ஸ்டன் வீசிய ஓவரில் ஹேல்ஸிடம் கேட்ச் கொடுத்து பால்பிரினி ஆட்டமிழந்தார்
ஆண்ட்ரு பால்பிரினி 47 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்தார்
மெல்போர்னில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து கேப்டன் ஆண்ட்ரூ பால்பிரினி அரைசதம் விளாசினார்.
உலகக்கோப்பையில் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
Twitter (@cricketireland)
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிரினி அதிரடியில் மிரட்டினார்.
Twitter (@cricketireland)
சிக்ஸர், பவுண்டரிகளை விளாசிய அவர், 47 பந்துகளில் 62 ஓட்டங்கள் விளாசினார். இது அவருக்கு 8வது சர்வதேச அரைசதம் ஆகும். அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
Twitter (@cricketireland)