அரண்மனை இரகசியங்கள் கசியலாம்... ஆண்ட்ரூ தொடர்பில் கடும் நெருக்கடியில் அரச குடும்பம்
ஆண்ட்ரூ ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சர்ச்சையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அரச குடும்பம் இறுதியாக சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்து, சமீபத்திய நகர்வுகளைச் சமாளிக்க முடிவெடுத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உலுக்கி இருக்கும்
ஆண்ட்ரூ கைது நடவடிக்கை குறித்து, பொலிஸ் தரப்பில் இருந்து எச்சரிக்கை எதுவும் அரச குடும்பத்திற்கு அளிக்கப்படவில்லையாம்.

மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் உட்பட அரச குடும்பத்தினர் எவருக்கும் கைது நடக்கப் போவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை என்பதுடன், ஆண்ட்ரூ தங்கியிருக்கும் பகுதிக்கு பொலிசார் சாதாரண உடையிலேயே சென்றுள்ளனர்.
ஆண்ட்ரூவின் கைது நடவடிக்கை கண்டிப்பாக அரச குடும்பத்தை உலுக்கி இருக்கும் என்றும், உடனடியாக அவர்கள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, விண்ட்சரில் தற்போதைய மற்றும் முந்தைய அரச குடும்பத்து ஆலோசகர்கள் ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
குடும்ப இரகசியங்கள்
கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, தனக்கும் ஆண்ட்ரூவுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பில்லை என்ற அறிக்கையை மன்னர் சார்லஸ் வெளியிட்டார், அதே நேரத்தில் காவல்துறைக்கு தனது ஆதரவு இருப்பதையும் சார்லஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆனால், ஆண்ட்ரூ கைது விவகாரம் கண்டிப்பாக அரச குடும்பத்திற்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ரூ மொத்தமும் உளறிவிடும் நபர் என்பதால், அரச குடும்பம் கடும் நெருக்கடியில் உள்ளதாகவே கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கடுமையானத் தண்டனையில் இருந்து தப்பும் வகையில், அரச குடும்பத்து இரகசியங்களை அவர் அம்பலப்படுத்தவும் வாய்ப்பிருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |