இளவரசர் ஆண்ட்ரூ கைது: அச்சத்தில் மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இளவரசிகள்
பிரித்தானிய மன்னர் சார்லசின் தம்பியும் பதவி இழந்த இளவரசருமான ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்து என்ன என்பது குறித்து ஆண்ட்ரூவின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் மன்னருடன் அவசர பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சத்தில் இளவரசிகள்
ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதால், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் கடுமையான அச்சத்திலும் பதற்றத்திலும் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகவே, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தங்களுக்குள் விவாதித்துவரும் இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், இந்த வார இறுதியில், மன்னர் சார்லசை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில், தன் சகோதரனுடைய பிள்ளைகளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதில் மன்னர் சார்லஸ் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், ராஜகுடும்ப எழுத்தாளரான இன்கிரிட் (Ingrid Seward), இளவரசிகள் பீட்ரைஸுக்கும் யூஜீனிக்கும், தங்கள் வாழ்க்கை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகவும், தங்கள் தந்தை தங்களுக்குச் சொன்ன எல்லா விடயங்களுமே உண்மைதானா என்னும் சந்தேகம் இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தனை ஆண்டுகளாக, பிள்ளைகளாக தாங்கள் சென்ற சுற்றுலா, தங்கள் வங்கிக்கணக்கில் தங்கள் தந்தை போட்ட பணம் எல்லாமே எங்கிருந்து வந்தது என்னும் கேள்வி அவர்களுக்கு எழுந்துள்ளதால், அவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார் இன்கிரிட்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |