இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், பதவிகள் அனைத்தும் பறிப்பு: சார்லஸ் மன்னர் அதிரடி
எப்ஸ்டீன் விவகாரம், சீனா தொடர்பு உள்ளிட்ட பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை அடுத்து இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ
மன்னர் சார்லஸின் சகோதரரான இளவரசர் ஆண்ட்ரூ தாமாகவே முன்வந்து, பட்டங்கள் மற்றும் பதவிகள அனைத்தையும் கைவிட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
மன்னர் சார்லஸ் மற்றும் பட்டத்து இளவரசர் வில்லியம் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட விரிவான ஆலோசனைகளுக்கு முடிவில், ஆண்ட்ரூ இந்த முடிவுக்கு வந்துள்ளார் என கூறுகின்றனர்.
வெள்ளிக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் ஆண்ட்ரூ இந்த அறிவிப்பை வெளியிட்டார், அதில் அவர் ஆர்டர் ஆஃப் தி கார்டர் உட்பட தனது அனைத்து பட்டங்களையும் கைவிடுவதாக அறிவித்தார்.
ஆனால் ஏற்கனவே முன்னெடுக்கபப்ட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2078 வரையில் அவர் அரச குடும்பத்திற்கு சொந்தமான மாளிகையில் வசிப்பார் என்றே கூறப்படுகிறது.
1986ல் ஆண்ட்ரூ மற்றும் சாரா பெர்குசன் தம்பதியின் திருமண நாளில் அவர்களுக்கு டியூக் மற்றும் டச்சஸ் ஆஃப் யார்க் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. தற்போது சாராவும் தமது டச்சஸ் பட்டத்தை இழக்க வேண்டியிருக்கும்.
பயன்படுத்த முடியாது
Duke of York என ஆண்ட்ரூ இனி அறியப்பட்டாலும், அந்த பட்டத்தை அவர் இனி எங்கேயும் பயன்படுத்த முடியாது. சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் நடைபெறும் கிறிஸ்துமஸ் குடும்ப கொண்டாட்டங்களில் ஆண்ட்ரூ கலந்து கொள்ள மாட்டார்.
மன்னர் சார்லஸ் மற்றும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவுக்கு வந்துள்ளதாக ஆண்ட்ரூ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022 ஜனவரி மாதம், ஆண்ட்ரூவின் இராணுவப் பட்டங்களை அவரது தாயார் மறைந்த எலிசபெத் ராணியார் ஏற்கனவே பறித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |