அந்த ஒருநாளில் மட்டும்... இளவரசர் ஆண்ட்ரூவுக்கு சிறப்பு அனுமதி அளித்த சார்லஸ் மன்னர்
பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியவர் என பொதுமக்களால் விமர்சிக்கப்படும் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு, மன்னர் சார்லஸ் சிறப்பு அனுமதி ஒன்றை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ரூவுக்கு சிறப்பு அனுமதி
சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவின் போது ராஜ குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக சிறப்பு அங்கியை அணிந்து கொள்வார்கள். அந்தவகையில், அப்படியான அங்கியை அணிந்துகொள்ள தற்போது இளவரசர் ஆண்ட்ரூவுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
@getty
மட்டுமின்றி, மன்னர் சார்லஸ், இளவரசர் எட்வார்ட் மற்றும் 600 சிறப்பு விருந்தினர்களுடன் இளவரசர் ஆண்ட்ரூவும் விழாவினை சிறப்பிக்க இருக்கிறார். பிரித்தானிய ராஜ குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு பறிக்கப்பட்டது.
அமெரிக்க நபருடன் இணைந்து பாலியல் துஸ்பிரயோக வழக்கில் இளவரசர் ஆண்ட்ரூ சிக்கியிருந்தார். இந்த வழக்கில் தாம் குற்றவாளி இல்லை என்றே ஆண்ட்ரூ மறுத்து வந்தாலும், அவருக்கு எதிரான ஆதாரங்கள் இருப்பதாகவே கூறப்படுகிறது.
Credit: Ian Whittaker
அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணி
மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்ளும் 127 ஆண்டு பரம்பரை உரிமையை மட்டும் இளவரசர் ஆண்ட்ரூவிடம் இருந்து மறைந்த ராணியார் பறிக்கவில்லை.
இதுவரை அந்த உரிமையை வழங்க மன்னர் சார்லஸ் மறுத்து வந்துள்ள நிலையில், திடீரென்று அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணி வெளியாகவில்லை.
@PA
மேலும், ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹரி, ராணியாரின் இறுதிச்சடங்கின் போது அவருக்கான ராஜ குடும்பத்து மரியாதை அங்கியை அணிய மன்னர் சார்லஸ் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.