எப்ஸ்டீன் வழக்கில் சிக்கிய ஆண்ட்ரூ... வங்கியாளர் நண்பருக்கு அரசாங்க தரவுகளை கசியவிட்டது அம்பலம்
எப்ஸ்டீன் வழக்கில் சிக்கி கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆண்ட்ரூ தனது வங்கியாளர் நண்பருக்கு கருவூல ரகசிய தரவுகளை கசியவிட்டதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
வங்கியாளர் நண்பருக்காக
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் பிரித்தானியாவின் வர்த்தகத் தூதராக செயல்பட்டு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தை நெருக்கிய நிதி நெருக்கடி குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்களை ஒருமுறை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஆண்ட்ரூவின் கோரிக்கையை ஏற்று ரகசிய தரவுகளை கருவூலத்துறை கைமாறியுள்ளது. ஆனால், அந்தத் தரவுகளை அவர் தனது நண்பரும் வங்கியாளருமான Jonathan Rowland என்பவருக்கு கசியவிட்டுள்ளார்.
ஏற்கனவே, பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான தரவுகளை எப்ஸ்டீனுக்கு ஆண்ட்ரூ கசியவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்த பேரிடியாக ஜோனாதன் ரோலண்ட் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
தற்போது Thames Valley காவல்துறை அதிகாரிகள் இந்த வழக்கை விசாரிப்பது தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டேவிட் ரோலண்ட் என்பவரால் நிறுவப்பட்ட Banque Havilland வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாகி இந்த ஜோனாதன் ரோலண்ட். வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில், ஆண்ட்ரூ ரகசிய தரவுகளை கசியவிட்ட காலகட்டத்தில், 2008 வங்கி நெருக்கடியில் பிரித்தானியர்கள் வைப்புத்தொகை இழந்தது தொடர்பாக இங்கிலாந்து மற்றும் ஐஸ்லாந்து இடையே ராஜதந்திர மோதல் ஏற்பட்டிருந்தது.
ஆண்ட்ரூவின் கடன் ரத்து
மட்டுமின்றி, ஜோனாதன் ரோலண்ட் என்பவருக்கு கருவூல ரகசியத்தை ஆண்ட்ரூ கசியவிடுவதற்கு ஒரு வருடம் முன்பு தோல்வியுற்ற ஐஸ்லாந்து கடன் வழங்குநரிடமிருந்து Banque Havilland வங்கி சொத்துக்களை வாங்கியிருந்தது.
ஆண்ட்ரூ கசியவிட்ட தரவுகளால் ஜோனாதன் ரோலண்ட் தமக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வாய்ப்பாக அமைந்தது என்றும் கூறப்படுகிறது. அதாவது ஐஸ்லாந்தின் அரசு சட்டத்தரணிகள் அலுவலகம், Kaupthing வங்கியின் அலுவலகங்களை சோதனை செய்த சில நாட்களுக்குப் பிறகு ஆண்ட்ரூ இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.

Kaupthing வங்கி திவாலானதன் பிறகு, அதன் ஒரு பகுதியை பாங்க் ஹேவிலாண்ட் கையகப்படுத்தியது. இதன் காரணமாகவே, பிரித்தானியர்கள் பலர் தங்கள் பணத்தை இழந்தனர்.
நண்பரான ஜோனாதன் ரோலண்ட்டுக்கு ரகசிய தரவுகளை கசியவிட்ட ஆண்ட்ரூவுக்கு, 2017ல் அவர் வாங்கியிருந்த 1.5 மில்லியன் பவுண்டுகள் கடனை ஜோனாதனின் தந்தை டேவிட் ரோலண்ட் ரத்து செய்துள்ளார் என்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |