இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறிய இளவரசர் ஆண்ட்ரூ
ராஜகுடும்பத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய இளவரசர் ஆண்ட்ரூ, இரவோடு இரவாக தான் தங்கியிருந்த வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
ராஜ குடும்பத்துக்கு தொடரும் தலைக்குனிவு
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய தம்பியுமான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்தித்துவருகிறது.
ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியும் ராயல் லாட்ஜ் என அழைக்கப்படும் ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான, 31 அறைகள் கொண்ட ஒரு பிரம்மாண்ட மாளிகையில் தங்கியிருந்தார்கள்.

ராஜ குடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்த ஆண்ட்ரூவும் சாராவும் ராயல் லாட்ஜில் வாழ்வதற்கு கடும் எதிர்ப்பு உருவானதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேற்ற மன்னர் முடிவு செய்திருந்தார்.
இரவோடு இரவாக...
இதற்கிடையில், கொஞ்சம் காலம் கூட எப்படியாவது ராயல் லாட்ஜில் தங்கிவிடலாம் என திட்டமிட்டிருந்தாராம் ஆண்ட்ரூ.
ஆனால், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.

அவற்றில், எப்ஸ்டீன், 26 வயது ரஷ்ய இளம்பெண் ஒருவரை ஆண்ட்ரூவுக்கு அறிமுகம் செய்துவைப்பது குறித்த தகவலும், பெண்ணொருவர் படுத்துக்கிடக்க, கிட்டத்தட்ட அவர் அருகே ஆண்ட்ரூ நாலு காலில் நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றும், ஆண்ட்ரூவும் சாராவும் தங்கள் பிள்ளைகள் குறித்து எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்ட விடயங்களும் மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளதால் ராஜகுடும்பத்தில் மீண்டும் பரபரப்பு உருவானது.
ஆகவே, ஆண்ட்ரூ உடனடியாக ராயல் லாட்ஜிலிருந்து வெளியேற வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை இரவோடு இரவாக ஆண்ட்ரூ ராயல் லாட்ஜிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்காக கொடுக்கப்பட்டுள்ள வீடு தயார் ஆகாததால், Wolferton என்னும் கிராமத்திலுள்ள Wood Farm Cottage என்னும் வீட்டில் தற்காலிகமாக தங்க உள்ளார் ஆண்ட்ரூ.

பின்னர், ஏப்ரல் மாத துவக்கத்தில் Marsh Farm என்னும் இடத்தில் நிரந்தரமாக குடியமர இருக்கிறார்.
ஆண்ட்ரூ தன் முன்னாள் மனைவியான சாராவுடன் வாழ்ந்துவந்த 30 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய, 31 அறைகள் கொண்ட ராயல் லாட்ஜை ஒப்பிடும்போது, அவர் அடுத்து குடியமர இருக்கும் Sandringhamஇலுள்ள Marsh Farm வீடு, Shoe Box-Sized என்றே விமர்சிக்கப்படுகிறது.

அதாவது, அது பெறும் ஐந்து படுக்கையறைகள் மட்டும் கொண்ட ஒரு வீடாகும். அதில், இதற்கு முன் ஒரு விவசாயி வாடகைக்கு தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |