ஈரான் போரால் இளவரசர் ஆண்ட்ரூவுக்கு உருவாகியுள்ள பிரச்சினை
எப்ஸ்டீன் கோப்புகளால் மரியாதையை இழந்து வெளியே தலைகாட்டமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ள இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் ஈரான் போரால் பிரச்சினை உருவாகியுள்ளது.
ஈரான் போரால் இளவரசர் ஆண்ட்ரூவுக்கும் பிரச்சினை
வேலை தருவதாக வாக்களித்து, ஏராளமான இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை, அமெரிக்க நீதித்துறை, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

அந்த ஆவணங்களில் இளவரசர் ஆண்ட்ரூவின் பெயர் இருப்பது தெரியவந்துள்ளதால், அதாவது, மோசமான குற்றவாளியுடன் ஆண்ட்ரூ தொடர்பு வைத்திருந்தது தெரியவந்ததால், ஆண்ட்ரூ மீது ராஜகுடும்பம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், ஆண்ட்ரூ, பஹ்ரைன் அல்லது அபுதாபிக்குத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், ஆண்ட்ரூவின் திட்டம் குறித்து அரண்மனை மூத்த ஊழியர் ஒருவர் அவசரமாக தகவல் கொடுக்க, பொலிசார் அவரை கைது செய்ய, ஆண்ட்ரூவின் திட்டம் பலிக்காமல் போனது.
விடயம் என்னவென்றால், இப்போதும் அவரால் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகிவிட்டது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றின்மீது தாக்குதல் நடத்த, ஆண்ட்ரூவின் மத்திய கிழக்குப் பயணத் திட்டத்துக்கு தடை உருவாகிவிட்டது.
அதேபோல, ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனுக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் நண்பர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் போர் உருவாகிவிட்டதால், ஆண்ட்ரூவும், சாராவும் இப்போதைக்கு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்ல வாய்ப்பே இல்லை என்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |